அரேபிய எழுத்தோவியம்; கட்டாயம் அல்ல

0

கோலாலம்பூர்,
ஆக. 9-
சில மாற்றங்க ளுடன் ’காட் எனப்படும் அரேபிய எழுத்தோவியம் அடுத்தாண்டு தமிழ் – சீனப் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பில் இருந்து ஆரம்பிக்க அமைச் சரவை அனுமதி யளித் துள்ளது என்று கல்விய மைச்சர் மஸ்லி மாலிக் கூறினார்.
தேசிய மொழி பாடத்திட் டத்தில் இதனை இணைப் பதற்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பைக் கருதி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேசிய மொழி பாடப்புத்தகத்தில் 6 பக்கங்களில் இதனை இணைக்கும் முடிவு 3 பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் இதனை அமல்படுத்துவதா இல்லையா என்பதை அந்தந்த வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களின் முடிவுக்கு விட்டுவிடுவதாக அவர் சொன்னார்.

தேசிய மொழி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அந்த அம்சங்களை அந்தந்த ஆசிரியர்கள் தங்களின் சொந்தச் சிந்தனைக்கேற்ப படித்துக் கொடுப்பது பற்றி முடிவு செய்யலாம். எனினும் இது ஒரு தேர்வுப்பாடமாக இருக்காது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஜாவி எழுத்தின் ஓர் அறிமுகமே இந்த காட் ஆகும். நாட்டின் பாரம்பரியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கவே இதைக் கொண்டுவருகிறோம். ஜாவியை பல இடங்களில் பார்க்கலாம். நமது நாணய நோட்டுகளில் கூட இது இருக்கிறது என்றார் அவர்.
ஆகக் கடைசியாக இந்த காட் அரேபிய எழுத்தோவியத்துக்கு சபா -சரவா மாநிலங்கள் தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றன. இதனை அங்குள்ள தாய்மொழிப் பள்ளிகளில் அமல்படுத்துவதை சட்டப்பூர்வமாக தடை செய்யும் வழிகளைக் கண்டறிவோம் என அம்மாநிலங்கள் அறிவித்துள்ளன. மாநிலத்தில் பல கிராமப்புற பள்ளிகளின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், தேவையில்லாமல் இதைக் கொண்டு வருவது ஏன் என்று சபா வினவியுள்ளது.
இதற்கு பதிலளித்த மஸ்லி, சபா – சரவா மாநிலங்கள் மலேசியாவின் ஓர் அங்கம். கல்வி பிரச்சினை மத்திய அரசாங்கத்திற்குரியது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =