அரபு நன்கொடை பொய்யானதா? நிரூபித்துக் காட்டுங்கள்

நஜிப்புக்கு வந்தது அரபு நன்கொடை என்பது பொய்யானது என்பதை அரசு தரப்பு முதலில் நிரூபித்து காட்டட்டும். அதன் பின்னரே நஜிப்பை அவர்களால் தண்டிக்க முடியும் என்று எதிர் தரப்பு தலைமை வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா கூறினார்.
நேற்று 1எம்டிபி வழக்கு தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷாபி முன்னாள் பிரதமர் நஜிப் செலவழித்த பணத்தின் மூலம் எது என்பதல்ல கேள்வி. மாறாக அது 1எம்டிபி பணமா என்பதைத்தான் அரசு தரப்பு நிரூபிக்க வேண்டும்.
இந்தப் பணம் சவூதி இளவரசர் உறுதிமொழி அளித்த 4.21 பில்லியன் நன்கொடை. இது நஜிப் கணக்கிற்கு வந்தது என்பது ஏதோ பரம ரகசியம் அல்ல. ஆனால், இவையெல்லாம் போலி, ஜோடிக்கப்பட்டவை என்பதை அரசு தரப்பு முதலில் நிரூபிக்கட்டும் என்றார் அவர்.
இதனிடையே, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராவதை முகமட் ஷாபி மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். மாறாக வழக்கை ஒத்தி வைக்க கோரவில்லை. நீதிமன்ற பதிவில் இதை பதியுங்கள் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − six =