அரசு மருத்துவமனை, தனியார் கிளினிக்குகளில் தடுப்பூசி சேவைகளை விரைந்து செயல்படுத்துக! பினாங்கு இந்து இளைஞர் பேரவை கோரிக்கை


நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்.-19 தொற்று நோயைத் தடுக்க தடுப்பூசி திட்டத்தை அரசு கிளினிக்கள்,தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் அரசு விரைவில் தொடங்க வேண்டும் என பினாங்கு இந்து இளைஞர் பேரவைத் சார்பில் அதன் மாநில தலைவர் கோமகன் லிங்கம் அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்தார்.
தடுப்பூசி திட்டத்தின் வாயிலாக கோவிட்-19 உயிர்க்கொல்லி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், அனைத்துலக நிலையில் உள்ள நாடுகள் தடுப்பூசி திட்டம் மேற்கொண்டதினால் அந்நாடுகளில் மக்கள் வழக்க நிலைக்குத் திருப்பி வருவதுடன், பொருளாதார சரிவிலிருந்து மீட்சி பெற அந்நாடுகள் தொடங்கி விட்டன எனக் கோமகன் மேலும் தெரிவித்தார்.
பலர் கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர், அவர்களுக்கு விரைந்து பல இடங்களில் கோவிட் தடுப்பூசி மையங்களை அமைப்பதன் மூலமாக மக்கள் பலனடைவார்கள் என மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய கணக்காய்வாளரான லி. கோமகன் விவரித்தார்.
இதனுடன் அரசாங்கம் நடமாடும் கிளினிக் வசதிகள் மேற்கொண்டு புற நகர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இதனால் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து வசதி இல்லாத பெருவாரியான மக்கள் பயனடைவார்கள்.
இதனிடையே மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசியல் பேதமற்ற நிலையில் இந்நாட்டு மக்களைக் காப்பதற்கு உரிய நடவடிக்கையைப் பக்காகத்தான் நேஷனல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தடுப்பூசி திட்டத்திற்கு விரைந்து எல்லா இடங்களிலும் மக்களை சென்று அடையச் செய்தால் நாட்டு மக்கள் நன்மை பெற்று நாடு வழக்க நிலைக்க திரும்ப முடியும் எனக் கோமகன் குறிப்பிட்டார்.
நடப்பு அரசாங்கம் கோவிட்-19 கட்டுப்படுத்த பலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இது பாராட்டப்பட வேண்டியது என்றும்,நாட்டு மக்களுக்கு விரைந்து தடுப்பூசி அனுப்பி வைக்கும் சேவையை விரிவு படுத்த வேண்டும் என்று மலேசியச் சுகாதார அமைச்சு,மலேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் மலேசியத் தடுப்பூசி ஒருங்கிணைப்புக் குழு தலைமையகத்துக்கு பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்படும் எனவும் கோமகன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =