அரசுப் பதவியில் இருந்து விலகும்படி தியான் சுவாவிற்கு உத்தரவு

0

மலேசிய உற்பத்தித் திறன் கழகத் தலைவர் பதவியில் இருந்து விலகும்படி பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான தியான் சுவாவிற்கு ஒரு கடிதம் வழி பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செய்யப்பட்ட அரசியல் நியமனத்தில் இருந்து பதவி விலகும்படி பிகேஆர் மத்திய
தலைமைத்துவம் முடிவு செய்துள்ள தாக கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஏப்ரல் 26ஆம் தேதி இந்தப் பதவிக்கு தியான் சுவாவை நியமனம் செய்தது. பிகேஆர் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அணியைச் சேர்ந்த தியான் சுவாவை கடந்த வாரம் பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் எச்சரித்திருந்தது.
கடந்த வாரம் அஸ்மின் அணியைச் சேர்ந்த 5 தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 9 =