அரசியல் சூழ்நிலை சாதகமாக இருந்தால், மலேசியாவுக்கு வருவேன்

மலேசியாவுக்கு வந்து 1எம்டிபி வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஆனால், அதற்கு அரசியல் சூழ்நிலை சாதகமாக இருக்க வேண்டுமென சட்டத்துக்குப் பயந்து மறைந்து வாழும் ஜோ லோ தெரிவித்துள்ளார். தமக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு, நியாயமான முறையில் வழக்கு நடத்தப்பட்டால் மட்டுமே தாம் மலேசியாவுக்குத் திரும்பி வர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மலேசியாவி லிருந்து தப்பித்து ஓடி, பல ஆண்டுகளுக்குப் பின்னர், தமது உதவியாளரின் மூலம் அளித்த பேட்டியில், அவர் இதனைத் தெரிவித்தார்.
1எம்டிபியின் நிதி முறைகேடலில் முக்கிய சூத்திரதாரியாக ஜோ லோ குறிப்பிடப்பட்டுள்ளார்.
1எம்டிபி பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் அவர் மீது சொத்துப் பறிப்பு சம்பந்தமாக 30 வழக்குகளைத் தொடுத்துள்ளது.
ஜோ லோ எந்த நாட்டில் இருக்கிறார் என்பது மர்மமாகவே இருக்கிறது. ஜோ லோ மறைந்து வாழும் நாடு அவரைக் கைது செய்து மலேசியாவிடம் ஒப்படைக்க ஒத்துழைப்பு தர மறுத்து வருவதாகப் போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் சாடியிருந்தார். அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஜோ லோவின் பேட்டியில் புற்றுநோய் ஆய்வுக்கு ஆதரவும் பணவுதவியும் செய்யப் போவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்க நீதித்துறையின்மீது தாம் நிறைய நம்பிக்கையை வைத்திருப்பதாகவும் தமது வழக்குகள் பலவற்றுக்கு முடிவு காணப்பட்டிருப்பதில் தாம் திருப்தி கொண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரின் பல சொத்துகளைக் கையகப்படுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான பணம் பெறப்பட்டுள்ளது.
1எம்டிபி நிதி முறைகேட்டில் தாம் ஓர் இடைத் தரகராக மட்டுமே செயல்பட்ட தாகவும் ஆனால், அரசியல்வாதியாக இல்லையென்பதால் தாம் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சவூதி அரேபிய பிரமுகர்களுடனான தமது நல்லுறவின் மூலம், மலேசியாவுக்கு பல நன்மைகள் கிடைத்ததாகவும், அதன் மூலம் ஹஜ்ஜுக்கு செல்வதற்குக் கூடுதல் இடங்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =