அரசியல் கொந்தளிப்பில் கோவிட்-19 வைரஸை மறக்கலாகாது

நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தில் உலகை ஆட்டிப் படைக்கும் கோவிட்-19 வைரஸ் நோயை மறந்து விடக்கூடாது என மலேசிய மருத்துவக் கழகம் நினைவுறுத்தியது.

தற்போதைய நிலையை ஆராய்ந்து அதற்கான தகுந்த நட வடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்று அதன் தலைவர் டாக்டர் ஞானபாஸ்கரன் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோயினால் நாட்டின் வருமானம் பாதிப்படைந்து பொருளாதார நலிவு ஏற்பட்டு, மக்கள் அவதியுறும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

எனவே, நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் அதற்காகப் பாடுபட வேண்டுமென ஞானபாஸ்கரன் கேட்டுக் கொண்டார்.

பிப்ரவரி 24ஆம் தேதி வரை, நாட்டில் ஏற்பட்ட 22 கோவிட்-19 சம்பவங்களில் 15 சீன நாட்டவர்களும் 6 உள்நாட்டவர்களும் ஓர் அமெரிக் கரும் பாதிக்கப்பட்டனர். அதில் 14 சீன நாட்டவர்களும் 6 உள் நாட்டவர்களும் குணமடைந்திருப் பதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 3 =