அரசியல் இலாபத்திற்காக காணொளியில் பேசிய பூஜா நாராயணன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

0

நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதனை நினைத்து கெப்போங்கில் அமைந்திருக்கும் ம.இ.கா. கிளையைச் சேர்ந்த பூஜா நாராயணன் என்ற பெண்மணி தேவையில்லாமல் மனித வள அமைச்சர் எம்.குலசேகரனை காணொளியில் சாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் கூறினார்.150,000 பாகிஸ்தானிகள் நம் நாட்டிற்கு பாதுகாவலர் வேலைக்கு வருகையளிப்பார்கள் என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அதற்கும் தமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்து விட்டார்.
ஆனால், அவ்வாறு அவர் கூறியிருந்தாலும், அவர் தான் பாகிஸ்தானிகளை கொண்டு வருகிறார். அதெல்லாம் அவருடைய வேலை தான். அதனால், தற்பொழுது பாதுகாவலர் பணியில் இருக்கும் 30 சதவீதம் பி40 மக்கள் வேலையின்றி தவிப்பார்கள் என்று அப்பெண்மணி கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பான தகவலாகும்.
எம்.குலசேகரனின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது, அவர் பேசும் தோரணையே புலப்படுத்துகிறது. நம் பெண்களை மதம் மாற்றம் செய்து பாகிஸ்தானிகள் மலேசியாவில் புகுந்து விடுவார்கள் என்றெல்லாம் அவர் நக்கலாக பேசியுள்ளார். வேறு சமயத்தை சேர்ந்த ஆடவரை உடனே நம்பி மதம் மாறி, திருமணம் செய்து கொள்ள நம் இந்து பெண்கள் என்ன அறிவு சூன்யங்களா? நம் பெண்களையும் அப்பெண்மணி சிறுமைப்படுத்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதையடுத்து, எம்.டி.யூ.சி. யின் பொதுச் செயலாளர், ஜே.சோலமன் என்பவரும் குலசேகரனை சாடி அறிக்கை வெளியிட்டு வருகிறார். குலசேகரன் தமக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவிட்டார். உள்துறை அமைச்சரும் அந்த தகவலை மறுத்து விட்டார். அப்படியிருக்க, பாகிஸ்தான் நாட்டு ஊடகத்தில் வந்த செய்தியை நம்பி இப்படியா ஊடகங்களில் பொய்யான அறிக்கை விட வேண்டும்.
அரசியல் இலாபத்திற்காக செயல்படுவது மனித இயல்பாக இருந்தாலும், இப்படியா மோசமாக பேசுவது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + four =