அரசியல்வாதிகள் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்

நாடு வளம் பெற அரசியல் வாதிகள் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென்று பிகே ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மக்களின் குறைகூறல் களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு, சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்திய அவர், தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் மறைந்து கொண்டு, மறைமுகமாக முடிவுகளை எடுத்து, ஊடகங்களை அச்சுறுத்தி நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஐநாவின் சிறப்பு அதிகாரியான பிலிப் ஆல்ஸ்டன், நாட்டின் வறுமையின் விகிதாசாரம் 14 விழுக்காடாக இருப்பதாக அறிவித்ததை, ஏற்க மறுத்து அது 0.4 விழுக்காடாக இருப்பதாக அனைத்துலக வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அன்வார், அரசின் நிர்வாகம் சிறப்பான முறையில் இயங்குவதைக் காட்டிக் கொள்ளவே வறுமையின் குறியீட்டைக் குறைத்து அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடும் கண்டனங்களை அடுத்து, நேற்று முன்தினம் வறுமையின் குறியீடாக இருந்த 980 ரிங்கிட்டை அரசு 2,208 ரிங்கிட்டாக உயர்த்தியது. மலாய்க்காரர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை அகற்றிய பெரிக்காத்தான் நேஷனல், இது வரை மலாய்க்காரர்களுக்காக என்ன செய்தது என்று அன்வார் கேள்வி எழுப்பினார்.
அளவுக்கதிமான மலாய்க்கார அமைச்சர்களை உருவாக்கி ஆண்டுக்கு அவர்களுக்காக 7.6 மில்லியன் ரிங்கிட்டை சம்பளமாகவும் அலவன்ஸாகவும் வழங்கியது தான் அவர்களின் சாதைனை யாக உள்ளது.
தொழில்துறை நிபுணர்களி டமிருந்து குறிப்பாக மலாய்க்கார நிபுணர்களிடமிருந்து, பொதுத்துறைப் பொறுப்புகளைப் பிடுங்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாரை வார்த்து அவர்களைப் பணக் காரர்களாக ஆக்கியிருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்று அன்வார் கேள்வி எழுப்பினார். நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்போம் என்று அறைகூவல் விடுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி, வாய்ச்சொல்லில் மட்டுமே வீரத்தைக் காட்டுகிறது.
மலாய்க்காரர்களின் வசமிருந்த கோடிக்கணக்கான தொழில் துறைப் பங்குகளைக் காலி செய்து, பூமிபுத்ராக்களின் நிலங்களை கபளீகரம் செய்து, பல மெகா திட்டங்களில் ஈடுபட்டு ஊழலில் கொள்ளை யடித்து நாட்டையே நிர்மூல மாக்கிய கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்துவதால் மலாய்க்காரர்களின் நலனை இந்த அரசு தற்காக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கோவிட்-19 நோயை ஒழிப்பதன் மூலம் அதிகரிக்க முடியாது என்று குறிப்பிட்ட அன்வார், இந்நோயை ஒழிக்க தீவிரமான, நலன்தரும் திட்டங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 8 =