அரசியலில் இருந்து விலகும் முடிவை ரபிஸி பரிசீலனை செய்ய வேண்டும்

0

அரசியலில் இருந்து விலகும் முடிவை பிகே ஆரின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி மறு பரிசீலனை செய்ய வேண்டுமென நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் மாநில பிகேஆர் தலைவருமான அமினுடின் ஹருண் கேட்டுக் கொண்டார்.
ரபிஸிக்கு நாட்டின் அரசியலில் சிறப்பான எதிர்காலம் உள்ளதால், அதில் அவர் பிரகாசிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் தகுதியுள்ள ஒரு சிறந்த தலைவரை கட்சி இழக்கக்கூடாது. தெளிவான கருத்துகளை முன்வைத்து, நாட்டில் ஜனநாயகம் தழைக்கப் போராடும் ஒரு தலைவரை நாடு இழக்கக்கூடாது எனும் காரணத்தினால் அவருக்கு நெருங்கிய நண்பர் என்ற முறையில் அவரின் முடிவைப் பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்துவதாக அமினுடின் குறிப்பிட்டார். தாம் அரசியலுக்குத் திரும்பி வராமல், மூன்று அல்லது நான் காண்டு காலத்தில் சாதாரண குடிமகனாக இருக்கப் போவதாக ரபிஸி கடந்த 15ஆம் தேதி அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − thirteen =