அரசியலில் இருந்து மகாதீரை ஒதுக்க முடியாது

tun Mahathir

பக்காத்தான் ஹராப்பான் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்ததை அடுத்து, துன் மகாதீரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குறுகிய காலத்திலேயே அவரை ஒதுக்க முடியாது என்று நியூசிலாந்து, தாஸ்மானியா ஆசிய கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சின் கருத்துரைத்துள்ளார்.
பிரதமர் முஹிடின் யாசினை பதவியிலிருந்து அகற்ற தாம் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை
ஏற்க வேண்டுமென்று அவர் முனைந்தபோது, பக்காத்தான் ஹராப்பான் அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராக நியமித்ததை அடுத்து, அவரின் முயற்சியானது தோல்வியுற்றதாகக் கருதக்கூடாது என்று குறிப்பிட்ட ஜேம்ஸ் சின், அவர் அதற்காகவேறு வழியைக் காண்பார் என்றும் தெரிவித்தார்.
மகாதீரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக எண்ணக் கூடாது. மலாய் சமூகத்தில் அவர் இன்னமும் செல்வாக்கு மிக்கவராகவே கருதப்படுவதை மறுக்கக் கூடாதென்றும் அவர் நினைவுறுத்தினார்.
பக்காத்தான் ஹராப்பான் அவரை ஆதரிக்கவில்லை என்பதை வைத்துக் கொண்டு, அவர் வேறொரு கூட்டணியை உருவாக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. ஆனால், அது கடினமாகவும் இருக்கும்.
இதனிடையே, மலாயா பல்கலைக்கழகத்தின் அவாங் அஸ்மான் பாவி கூறும்போது, மகாதீர் தமது அதிகாரத்தை இழந்திருந்தாலும், அடுத்து என்ன செய்யலாம் என்பதை அவர் சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நேரம் வரும்போது, அதனைப் பிரயோகிப்பார் என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அஸ்மி ஹசான்,
2018ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அவரின் ஆற்றலில் தொய்வு ஏற்பட்டு அவரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருவதுபோல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் தோற்றுவித்த கட்சியான பிரிபூமி பெர்சத்து அம்னோவுடன் கூட்டணியை உருவாக்கியிருப்பதால், அதற்கு அவர் திரும்ப இயலாது. அவர் இனி அம்னோவுடன் இணைந்து செயல்படவும் வழியில்லை.
இந்நிலையில், திடீர் தேர்தல் வந்தால், அவர் தமது லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்வதே நல்லது.
பக்காத்தான் ஹராப்பான் அன்வாரை ஆதரிக்க முடிவெடுத்துள்ள தால், மகாதீர் அக்கூட்டணியின் கணிசமான ஆதரவை இழக்க வேண்டிவரும். எனவே, அவர் லங்கா வியை தற்காப்பது சிரமமாக இருக்கும்.
அவர் அத்தொகு தியில் வெற்றி பெற்று, அதன் பின்னர் அரசிய லில் இருந்து விலக எண்ணம் கொண்டிருக்கலாம். அவரின் புதல்வர் முக்ரிஸ் மகாதீர் அரசியலில் ஒரு நிலையான இடத்தை அடைந்த பின்னர், அவர் அரசியலில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது.
மகாதீர் ஒரு நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்தால் மட்டுமே அவரால் பிரதமராவதற்கு எண்ணிப் பார்க்க முடியும் என்று ஜேம்ஸ் சின் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 15 =