அரசின் மேம்பாட்டுத் திட்டங்களில் தோல்வி; தணிக்கையில் கண்டுபிடிப்பு

0

அரசு, தனியார் துறையின் இரண்டு கூட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாக 2018ஆம் ஆண்டுக்கான தேசிய தணிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
248 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அத்திட்டத்தில், அதன் கட்டமைப்பு மற்றும் உபகரணங்களின் செலவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டிருந்தாலும் அது இன்னும் பூர்த்தி அடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில், பெர்டானா பல்கலைக்கழகத் திட்டமும் ஒன்றாகும். 191 மில்லியன் ரிங்கிட் செலவிலான அத்திட்டம் அரசினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அது இன்னமும் தொடங்கப்படவில்லை.
அதனை அடுத்து, எரிவாயு மின்சாரம் உற்பத்தி நிலையத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எரிபொருள் மேம்பாட்டு அதிகாரத்துவ மையம் மீட்டுக் கொண்டதால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.
மேலும் நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் தனியார் துறையில் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட யுக்காஸ் எனும் திட்டத்தில் 1,201 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நிர்வாகக் கோளாறு, திட்ட மதிப்பீடு, ஒப்பந்தத்தில் முறைகேடு முதலியவற்றால் அதில் பின்னடைவு ஏற்பட்டது. தனியார் துறைக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட 361 கோடி ரிங்கிட்டில், அதில் சம்பந்தப்படாத துறைகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது. அதன் நிதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்குக்கரை ரயில் திட்டத்திற்காக நில ஆர்ஜிதம், எரி வாயு குழாய் திட்டம் மற்றும் டிரான்ஸ் சபா குழாய் திட்டத்திற்காக அந்நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தணிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + nine =