அரசின் நிதி மசோதாவை எதிர்க்கட்சிக் கூட்டணி ஆதரிக்கும்

கோவிட்-19க்கான நிதி ஒதுக்கீட்டை 9,000 கோடி ரிங்கிட்டாக அதிகரித்தால், அரசின் நிதி மசோதாவை எதிர்க்கட்சிக் கூட்டணி ஆதரிக்கும் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தற்போது ஒதுக்கியுள்ள 4,500 கோடி நிதி பொதுமக்களுக்கும் நலிந்துவரும் தொழில் துறையையும் பாதுகாக்க இயலாது என்ற காரணத்தினால், அதனை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.
அந்த நிதியை அதிகரிக்க அரசு முன்வந்தால், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எதிர்க்கட்சிக் கூட்டணி அந்த மசோதாவை ஆதரிக்க முன்வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவிட்-19 தாக்கத்தை எதிர்கொள்ள அரசு பரிந்துரைத்து ள்ள 4,500 கோடி நிதி மசோதா சம்பந்தமான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது, லிம் குவான் எங் அவ்வாறு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 13 =