அரசாங்கத்தின் நிலப் பங்குதாரர்களாக இணைக்கப்பட்டனர்

0

பேரா மாநில அரசு இங்குள்ள மாற்றுத்திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், பி40 அடித்தட்டு மக்கள் என 19 பேருக்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான செம்பனை தோட்ட நிலத்தில் பங்குதாரர் எனும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஊத்தான் மெலிந்தாங்கில் உள்ள வின்சன், மு.சரஸ்வதி, முனுசாமி, வ.சரஸ்வதி ஜோன் செல்லையா, பாகான் டத்தோவைச் சேர்ந்த ஈஸ்வரன், ராமராவ், சீத்தா ஆகியோரும் இவர்களில் அடங்குவர்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்க ஆட்சியின் கீழ் வசதியற்ற இந்திய குடும்பங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது இதுவே முதன் முறையாகும். கடந்த பாரிசான் ஆட்சிக் காலத்தில் தோழமைக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களே இவற்றை பங்கிட்டுக் கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் பேரா மந்திரி பெசார் தாமே களத்தில் இறங்கி கடமையாற்றியதில் சமுதாயம் மகிழ்ச்சி அடைகிறது என்று ஊத்தான் மெலிந்தாங் இந்திய புறநகர் தலைவர் அருள் பிரகாசம் தெரிவித்தார்.
அரசாங்கம் வழங்கிய இந்த வாய்ப்பில் பாகான் டத்தோ தொகுதியைச் சேர்ந்த மொத்தம் 200 புதிய நிலப் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர். இதற்கு மாவட்ட அதிகாரி, ஊத்தான் மெலிந்தாங் பிகேஆர் ஒருங்கி ணைப்பாளர் கோ.மணிவண்ணன், மாவட்டக் காவல்துறை அதிகாரி ஆகியோர் சிறப்பு வருகை அளித்துள்ளனர்.
மாவட்ட அதிகாரி உரையாற்று கையில், பேரா மந்திரி பெசார் வறுமையில் வாடும் மக்களுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வரிசையில் அரசாங்க செம்பனைத் தோட்டத்தில் பங்குதாரராக இவர்களைச் சேர்த்ததுடன், முதல் கட்டமாக இந்த ஆண்டு ஒருவருக்கு 300 வெள்ளி லாப ஈவாக வழங்கப்படுகிறது. இதனால், மாணவர்களின் பள்ளிச் சுமை சற்று குறையக்கூடும்.
இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை கூறியதோடு, அடுத்த ஆண்டு மேலும் பலர் பங்குதாரராகும் வாய்ப்பினைப் பெறுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பாகான் டத்தோ தொகுதியில் உள்ள அனைத்துத் தலைவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த தலைவர்களுக்கு மக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 9 =