அயோத்தி தீர்ப்பு: எதிர்த்த பாக். அமைச்சருக்கு இந்தியா பதிலடி

0

அயோத்தி வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பு குறித்து பாகிஸ் தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கர்தார்பூர் சிறப்பு பாதை திறப்பு விழா நடைபெறும் நேரத்தில், அயோத்தி குறித்து தீர்ப்பு அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்த சந்தோஷ நேரத்தில், மிகவும் முக்கியமான பிரச்னையில் தீர்ப்பு அளித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். தீர்ப்பை, வேறொரு நாளில் அளித்திருக்கலாம். இந்தியாவில், முஸ்லிம்கள் ஏற்கெனவே கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த தீர்ப்பு, அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர் கூறியிருந்தார். இதற்கு, இந்திய வெளியுறவுத் துறை பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்களில் வெறுப்பு கருத்து சொல்லும் நோய் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், வெறுப்
புணர்வை விதைக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என வெளியுற வுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =