அயல் நாட்டுக் கப்பல்கள் நங்கூரிமிடத் தடையில்லை!

0

கோவிட்-19 பரவல் மோசமடைந்து வரும் நிலையிலும் அயல் நாட்டுக் கப்பல்கள் இந்நாட்டுத் துறைமுகங்களில் நங்கூரமிட்டுத் தங்குவதற்கு தடையில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று அறிவித்துள்ளார்.

பயணிகள் கப்பலானாலும் சரக்குகள் கப்பலானாலும் அதில் பயணிப்பவர்கள் துறைமுகத்தில் வெளியேறுவதற்கு முன் இரண்டு அடுக்கு ஆரோக்கியப் பரிசோதனையைக் கடக்க வேண்டியிருப்பதால் அவர்கள் மூலம் கோவிட்-19 நச்சு உயிரி நாட்டு மக்களுக்குப் பரவும் அபாயம் இல்லை என்றும், அதனால் கப்பல்கள் கரை கட்டுவதற்குத் தடை விதிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் விளக்கினார். அப்படித் தடை விதிக்கப்பட்டால் நாட்டின் சுற்றுலா துறையும் பொருளாதாரத் துறையும் கடுமையாகச் சேதமடையும்.

கப்பல்கள் கரை கட்டுவதற்கு முன், அதில் பயணிக்கும் அனைவரின் விபரங்கள் துறைமுக சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். அத்தோடு அவர்களிடத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் மூலம் இன்புளுவன்ஷா சளி, கோவிட்-19 காய்ச்சலுக்கான அறிகுறி தென்படுகிறதா என்று கண்டறியப்படும். அப்படி அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு துறைமுகத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர். காய்ச்சலைக் கண்டறியும் வெப்பமானி நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் வந்து சென்ற அனைவரும் ஆரோக்கியமாகக் காணப்படுகின்றனர். எனவே, மலேசியர்கள் இந்நிலைமை குறித்து பதற்றமோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. மேலும், தங்கள் சொந்த நாட்டிலும் இப்பயணிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர். கோவிட்-19 என்பது கொரோனா வகை நச்சு உயிரிக்குக் கொடுக்கப்பட்ட அடையாளப் பெயராகும். இப்பெயரை உலக சுகாதார நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 14 =