அம்பாங் நாடாளுமன்றம் கெஅடிலானின் கோட்டை!

0

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அம்பாங் நாடாளுமன்றம் எப்போதும் கெஅடிலான் கோட்டையாக விளங்கும் என்று அம்பாங் கெஅடிலான் கவுன்சிலர் செகு சுப்ரா என்றழைக்கப்படும் டாக்டர் சுப்பிரமணி தெரிவித்தார். கடந்த மூன்று பொதுத்தேர்தல்களில் கெஅடிலான் கட்சி சார்பில் அம்பாங் நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட ஸுரைடா கமாருடின் அமோக வெற்றிபெற்றார். ஆனால், கெஅடிலான் கட்சியில் இருந்து இவர் விலகிக் கொண்டுள்ளார்.
இவருக்கு ஆதரவு தெரிவித்த சிலர் மட்டுமே கட்சியில் இருந்து விலகிக் கொண்டிருக்கும் வேளையில் அம்பாங் நாடாளுமன்றம் எப்போதும் கெஅடிலான் மற்றும் பக்காத்தான் ஹராப்பானின் கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று டாக்டர் சுப்பிரமணி தெரிவித்தார்.
1999ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கெஅடிலான் கட்சியைத் தோற்றுவித்தது முதல் இன்றுவரை அக்கட்சியில் ஓர் அடிமட்ட உறுப்பினராக இருந்து சேவையாற்றி வருவதாக டாக்டர் சுப்பிரமணி தெரிவித்தார். அம்பாங் நாடாளுமன்றத்தில் மொத்தம் 16,000 பேர் கெஅடிலான் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தத் தொகுதி கெஅடிலான் கோட்டையாகும். மேலும், நாங்கள் அனைவரும் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர்கள் என்று அவர் சொன்னார்.
கடந்த மாதத்தில் அம்பாங் கெஅடிலான் கட்சியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அம்பாங் நாடாளுமன்றம் எப்போதும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கெஅடிலான் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்றார் அவர். இதனிடையே, அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சமூகநலத் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு சென்றடைந்த வண்ணம் இருப்பதாக லெம்பா ஜெயா இந்தியர் கிராமத் தலைவர் நடேசன் தெரிவித்தார். அறம் இயக்கத்தின் தலைவருமான நடேசன் மேலும் கூறுகையில், அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் லெம்பா ஜெயா சட்டமன்றமும் இடம் பெற்றிருக்கிறது. மேலும், இந்த தொகுதியில் அதிகளவில் இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் பக்காத்தான் ஹராப்பானின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் பல சமூகத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதில் குறிப்பாக சிலாங்கூரில் உள்ள மூத்த குடிமக்களுக்கு பற்றுச் சீட்டு, வறுமை துடைத்தொழிப்புத் திட்டம், சிறுதொழில் திட்டம், உயர்க்கல்வி மாணவர்களுக்கான கல்விநிதி, சிலாங்கூர் மாநில அரசாங் கத்தின் மருத்துவ சிகிச்சை அட்டை போன்ற திட்டங்களில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்கும் பணிகளை முறையே செய்து வருகிறோம் என்றார் அவர். அம்பாங் சம்போராhனில் அதிகளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கும் வகையில் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார். மேலும், அம்பாங் இந்தியர்கள் இன்னமும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் மீது முழு நம்பிக்கைக் கொண்டிருக் கிறார்கள். வரும் பொதுத்தேர்தலிலும் அம்பாங் நாடாளுமன்றத்தில் கெஅடிலான் வெற்றியை உறுதிச் செய்வோம் என்றார் அவர். சிலாங்கூர் மாநில கிராமத் தலைவர்கள் குழுவுக்கு தலைமையேற்றுள்ள இராஜேந்திரன் இராசப்பன் கூறுகையில், சிலாங்கூர் மாநில நலத்திட்டங்கள் படிப்படியாக மக்களுக்கு சென்றடைவதாக குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர் கிராமத் தலைவர்கள் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிரு க்கிறார்கள். கவுன்சிலர்கள் மோகன், செகு சுப்ரா, பாலன் ஆகியோரும் மக்கள் பணியாற்றி வருகிறார்கள். அம்பாங் இந்தியர் கிராமத் தலைவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள தர்மராஜா, லெட்சுமணன், திருமதி பாராதி, திருமதி வசந்தி, திருமதி செல்வி ஆகியோரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − seven =