அம்பாங்கான் ஹைட்ஸ் வட்டாரத்தில் கோவிட் பாதிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மைசலாம் வழி நிதி பெறலாம்

நாட்டில் கோவிட் 19 தொற்று நோய் பரவலில் அதிகமானவர்கள் தங்களின் வாழ் வாதாரத்தை இழந்து தவித்து வருகிற அவலங்களை காண முடிகிறது. கெடா மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக வருமானமின்றி வேலைக்கும் வியாபாரத்துக்கும் போக முடியாமல் திணறியவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கணகெடுப்பில் உள்ளது. அரசாங்கம் இந்த பாதிப்புகளை கண்காணித்து பல வழியில் உணவு மற்றும் அடிப்படை தேவைகளை முடிந்த வரை செய்து கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் புக்கிட் செலம்பாவ் வட்டாரத்தின் சுங்கை லாலாங் அம்பாங்கன் ஹைட்ஸ் வட்டாரத்தில் வெளியில் வேலைக்கும் பொருட்கள் வாங்க செல்லவும் தடைகளை எதிர் கொண்டவர்களுக்கு அரசாங்கம் வழி நிதி பெற வழி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள பொது மக்கள் சுங்கை பட்டாணியில் உள்ள பெரிய மருத்துவமனையில் பாரங்கள் வினியோகம் செய்யபட்டு வருகிறது.
இதை கவனத்தில் கொண்டு அம்பாங்கான் ஹைட்ஸ் வட்டாரத்தின் தாமான் மெலோர், தாமான் மாவார் மற்றும் சூன் கெங்காங்கானில் வசிக்கும் இந்தியர்கள் விரைந்து சென்று தங்களின் பெயர்களை பதிவு செய்யுமாறு வட மலேசிய தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் சங்கம் கேட்டுகொள்கிறது. மைசலாம் வழி பாதிக்கபட்டவர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்க இந்த சலுகை உருவக்கபட்டுள்ளது.விண்ணப்பங்களை உடனே செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =