அம்னோ பெர்சத்துவுக்கு தொகுதிகளை
விட்டுக் கொடுக்காது!

அம்னோ ஒருபோதும் தனது தொகுதிகளை பெர்சத்துவுக்கு விட்டுக் கொடுக்காது என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் திட்டவட்டமாக அறிவித்தார். வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ தனது தொகுதிகளை பெர்சத்து கட்சிக்கு விட்டுக்கொடுக்கும்படி பாஸ் கட்சி நெருக்குதல் கொடுக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் அம்னோவை எதிர்த்து போட்டியிட்டு பெர்சத்து வெற்றிபெற்ற தொகுதிகளை மீண்டும் அக்கட்சிக்கு கொடுக்கும்படி பாஸ் வலியுறுத்தக்கூடாது என்றார் அவர்.

முவாஃபக்காட் நேஷனல் கூட்டணியில் பாஸ் கட்சியுடனான அம்னோவின் உடன்பாட்டை பாஸ் மதிக்க வேண்டும். எந்தவோர் அரசியல் கட்சியோ அல்லது எந்தவொரு நபரோ மற்ற கட்சியை ஏற்றுக்கொள்ளும்படி வலுக்கட்டாயமாக அம்னோவிற்கு நெருக்குதல் கொடுக்கக்கூடாது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
பெர்சத்துவிற்கு எதிரான அம்னோவின் நிலையை பாஸ் மதிக்க வேண்டும். பெர்சத்துவை ஏற்றுக்கொள்ளும்படி அம்னோவிற்கு பாஸ் நெருக்குதல் கொடுக்கக்கூடாது என்று நேற்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
பெர்சத்து இன்றி அம்னோவுடன் ஒத்துழைப்பதற்கு பாஸ் மறுத்து வருவதாக வெளியான தகவலை முகமட் காலிட் மறுத்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ தொகுதியில் வெற்றி பெற்ற சில எம்.பி.க்கள் வேறு கட்சிக்கு தாவியிருந்தாலும் அந்த தொகுதிகள் உட்பட எந்த தொகுதியையும் அம்னோ விட்டுக் கொடுக்கக்கூடாது என இதற்கு முன் அம்னோவின் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here