அம்னோ – பாஸ் ஒத்துழைப்பு மற்ற இனங்களுக்கு மிரட்டலாகக்கூடாது

அம்னோ – பாஸ் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்த நாட்டின் பல இன அமைப்பு முறைக்கு ஒரு மிரட்டலாகக் கூடாது என்று மசீச தலைவர் டத்தோ வீ கா சியோங் கூறினார்.
அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு முறைக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது. இந்த ஒப்பந்தம் வெற்றிபெற அனைத்து மலேசியர்களின் ஆதரவும் தேவை.
ஓர் இனம், ஒரு சமயத்துக்கு மட்டும் ஒரு கூட்டணி போராடினால், அது இந்த நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படை நோக்கத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும். அதை மசீச ஏற்றுக் கொள்ளாது என்றார் அவர்.
அம்னோ – பாஸ் ஒத்துழைப்பு மலேசிய சமுதாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதன் அடிப்படை கொள்கைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டும். மாறுபட்ட இனங்களின் சிறப்புகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றுதான் மசீச ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறது.
நான் முன்பு சொன்னதைப் போல் தேசிய முன்னணி எல்லா இனங்களையும் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை மசீச தொடர்ந்து வலியுறுத்தும் என்று வீ தொடர்ந்து கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =