அம்னோவும் பெர்சத்துவும் ஒரே குறிக்கோளைக் கொண்டிருப்பதால் அரசியல் சமாதானம் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது!

அம்னோவின் தேசியத் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி தன்னிச்சையாக அறிவித் திருந்த அரசியல் சமாதானம் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது என்று அரசியல் பகுப்பாய்வாளர் வோங் சின் குவாட் கூறுகிறார்.
மந்திரி பதவிகளுக்கு மட்டும் அம்னோவும் பெர்சத்துவும் போட்டி போட்டுக் கொண்டி ருக்கவில்லை. இரு தரப்பினரும் ஒரே குறிக்கோள் மற்றும் ஒரே விஷயத்தில் காதல் கொண்டி ருக்கின்றனர்.
மலாய் நாடாளுமன்ற, சட்ட மன்றத் தொகுதிகளைக் கைப் பற்றுவதே அம்னோ மற்றும் பெர்சத்து கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக இருந்து வருகின்றன.
இரண்டு காதலர்கள் ஒரே காதலியைக்குறிக்கோளாக வைத்திருக்கும் நிலையில் அவ்விரு தரப்பினரும் எவ்வாறு நண்பர்களாக இருக்க முடியும் என்று வோங் வினா எழுப்பினார்.
வியாழக்கிழமையன்று தமது முக நூலில் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரையில் வோங் இவ்வாறு குறிப்பிட்டார்.
வரும் பொதுத்தேர்தலில் அம்னோவும் பெர்சத்துவும் மலாய் தொகுதிகளை பங்கீடு செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்று அரசியல் விஞ்ஞானியான வோங் குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோவிடமிருந்து பெர்சத்து 15 நாடாளுமன்றத் தொகுதி களில் வெற்றி பெற்று எடுத்துக் கொண்டது. இந்த சூழ்நிலையில் அந்த 15 நாடாளுமன்றத் தொகுதிகளும் அம்னோவுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டுமா என்ற விவகாரம் எழுந்துள்ளது.
இவ்வகாரம் எழுந்துள்ளது. இவ்விகாரத்தில் இரு தரப்பின ருக்கும் சமமான, சாதகமான நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப் பில்லை.
அம்னோ தன் விருப்பம்போல் செயல்பட்டால் வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்துவிற்கு 20 நாடாளுமன்றத் தொகுதி களுக்கு மேல் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று வோங் கருது கிறார்.
அதற்கு மாறாக பெர்சத்து தன் விருப்பம் போல் செயல்பட்டால் சபா மாநிலத் தேர்தலில் நடந்த மாதிரி அம்னோ தோல்வியுற நேரிடும்.
2018இல் அம்னோ சபாவில் 17 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது குறிப்பிடத்தக்கது. மறு வருடம் 2019இல் எட்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவிற்கு கட்சி தாவினர்.
2020 சபா மாநிலத் தேர்தலில் அந்த பழைய எட்டுத் தொகுதி களில் இரண்டில் மட்டுமே போட்டி போட அம்னோ அனுமதிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு தொகுதியில் மட்டுமே அம்னோ வாகை சூடியது.
19 சபா சட்டமன்றத் தொகுதி களில் போட்டியிட்ட பெர்சத்து விற்கு எதிராக எந்தவொரு கீழறுப்பு நடவடிக்கையிலும் அம்னோ இறங்கவில்லை.
கபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியில் அதிக மான சட்டமன்றத் தொகுதிகளை வென்றிருந்தாலும் அம்னோ விற்கு சபா மாநில முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அம்னோ தன்னிச்சையாக அறிவித்திருந்த அரசியல் சமாதானம் காரணமாக அமைச்சரவையில் சில மாற்றங் கள் செய்யப்படலாம் என்று வோங் கருதுகிறார்.
வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்துவை எதிர்நோக்குவ தற்கு தங்களின் பலத்தை அமைச்சரவையில் உள்ள அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்கள் முயற்சிகளை மேற்கொள்வர்.
இருதரப்பினரும் ஒரே குறிக் கோளுடன் செயல்படுவதால் பெர்சத்துவிற்கும் அம்னோவிற்கும் சமாதானம் ஏற்படப் போவதில்லை என்று வோங் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 4 =