அம்னோவுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சினை இல்லை!

அம்னோவுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் பெர்சத்து சிரமத்தை எதிர்நோக்குவதாக வெளியான தகவலை அக் கட்சியின் துணைத் தலைவர் அமாட் பைஸால் அஸுமு மறுத்துள்ளார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றிபெற வேண்டும் என அம்னோ வலியுறுத்தி வருவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றார் அவர்.
பெரிக்காத்தான் நேஷனல் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக் குழுவில் தாமும் இடம்பெற்றுள்
ளதால், பெர்சத்து முட்டுக்கட்டையை எதிர்நோக்கவில்லை என பேராக் மந்திரி பெசாருமான அவர் சொன்னார்.
அதே வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் பங்காளிக் கட்சிகளுக்கான உறவுகளில் விரிசல் எதுவும் இல்லை என நேற்று முன்தினம் இங்கு பெர்சத்துவின் 4ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் பங்காளிக் கட்சிகளுக்கிடை யிலான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − two =