அம்னோவின் நெருக்குதலைத் தொடர்ந்து முஹிடின் அமைச்சரவையில் மாற்றம்!

  File Pic

  ஆட்டம் கண்டுள்ள தமது பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு அம்னோவின் ஆதரவு தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அமைச்சரவையில் மாற்றம் செய்ய விருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறலாம் என மலாய் தினசரி ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. சில அம்னோ தலைவர்கள் செனட்டர்களாக நியமிக்கப்பட்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட லாம் என எதிர்பார்க்கப்படுவ தாக அந்த செய்தி குறிப்பிட்டது.
  பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலிருந்து தனது ஆதரவை மீட்டுக் கொள்ளப் போவதாக அம்னோ விடுத்த நெருக்குதலைத் தொடர்ந்து, ஆட்சியை தற்காத்துக்கொள்ள முஹிடின் இந்த முடிவை செய்துள்ளதாக அந்த செய்தி கூறியது.
  அம்னோவிற்கு துணைப் பிரதமர் மற்றும் இதர முக்கிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜூடின் ரமலி நேற்று முன்தினம் வலியுறுத்தி இருந்தார்.
  தமக்கு போதுமான எம்பிக் களின் ஆதரவு இருப்பதாகவும் புதிய அரசாங்கத்தை அமைக்கப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த சில தினங் களுக்கு முன் மாட்சிமை தங்கிய மாமன்னருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  seventeen + 17 =