அமைதி ஒப்பந்த தினத்தை நினைவு கூருவதில் தவறில்லை

0

ஹட்யாய் அமைதி ஒப்பந்த தினத்தை நினைவு கூருவதில் பாதிப்பு எதுவும் இல்லை என முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஹிம் நோர் கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அரசாங்கம் அந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வரலாற்றுப் பூர்வ தினத்தை நினைவு கூருவதில் தவறு எதுவும் இல்லை என்றார் அவர்.
கம்யூனிஸ்டுகளுடன் நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட அந்த நினைவு நாளை கொண்டாடுவதில் என்ன தவறு என அவர் வினவினார்.
அந்த கொண்டாட்டம் கம்யூனிஸ்டை புதுப்பிப்பதாக அமையுமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ரஹிம் நோர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்யாய் அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மலேசியாவில் கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்தது.
இவ்வார தொடக்கத்தில் தாய்லாந்திலுள்ள சொங்க்லாவில் அந்த நினைவு நாள் கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் அஸ்தி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து சர்ச்சை உருவெடுத்தது.
நாட்டிக்குள் கொண்டுவரப்பட்ட சின் பெங்கின் அஸ்தி பேராவில் உள்ள தித்தி வங்சா மலைத்தொடர்களிலும் மற்றும் லுமுட்டிலுள்ளஆற்றிலும் கரைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடி வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + five =