அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்

0

அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தினால், தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.கடவுள்தான் எனது சாட்சி. அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக எம்ஏசிசி உறுதிப்படுத்தினால் முதலில் ராஜினாமா செய்யப்போவது நான் தான்” என்று நேற்று மக்களவையில் அவர் கூறினார்.
குத்தகைகளை வழங்கியது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டால், நீங்கள் ராஜினாமா செய்யத்தயாரா? என தேசிய முன்னணி பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷாஹார் அப்துல்லாவின் கேள்விக்கு சைட் பதிலளித்தார்.
மலாக்கா, சிலாங்கூர், பெர்லிஸ் ஆகிய இடங்களில் தேசிய இளைஞர் திறன் கல்விக்கூடங்களை நடத்த ஒரு நிறுவனத்துக்கு 70 லட்சம் வெள்ளி மதிப்பிலான குத்தகையை சைட் சாடிக் கொடுத்ததற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தேமு ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று மக்களவையில் கூறினார். குத்தகைகளை வழங்கியது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டால், நீங்கள் ராஜினாமா செய்யத்தயாரா? என தேசிய முன்னணி பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷாஹார் அப்துல்லாவின் கேள்விக்கு சைட் பதிலளித்தார்.
மலாக்கா, சிலாங்கூர், பெர்லிஸ் ஆகிய இடங்களில் தேசிய இளைஞர் திறன் கல்விக்கூடங்களை நடத்த ஒரு நிறுவனத்துக்கு 70 லட்சம் வெள்ளி மதிப்பிலான குத்தகையை சைட் சாடிக் கொடுத்ததற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தேமு ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று மக்களவையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + three =