அமைச்சர்கள் ஹீரோக்களாக முயற்சிக்கக்கூடாது

0

அமைச்சரவையில் விவாதிக் கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுகள் குறித்து அமைச்சர்கள் பொதுவில் கேள்வி எழுப்பி ஹீரோக்களாவதை தவிர்க்க வேண்டும் என உயர்கல்வி நிதியகத்
தின் (பிடிபிடிஎன்) தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார்.
ஒரு விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கும் போது அமைச்சர்கள் அதுகுறித்து தங்களின் ஆட்சேபங்களை தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
ஒரு விவகாரம் குறித்து அமைச் சர்கள் மாறுபட்ட கருத்துகளை பொதுவில் தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
அமைச்சரவையில் எடுக்கப் படும் எந்த ஒரு முடிவை யும் அமைச் சர்கள் ஒருமித்த கருத்துடன் குரல் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்ட பின் எந்த ஒரு விவகாரம் குறித்தும் அமைச்சர்கள் பொதுவில் தங்களின் ஆட்சேபங்களை வெளியிடக் கூடாது என பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
ஓர் அமைச்சர் ஒரு விவகாரம் குறித்து ஆட்சேபம் தெரிவிக்க முடிவு செய்தால், அதனை சமூக வலைத்தளத்தில் செய்யக்கூடாது என வான் சைபுல் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 12 =