அமைச்சர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகள் இனிமேல் இல்லை

0

பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்களுடன் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்த மாட்டார்கள் என அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
நடப்பு அரசாங்கத்துடன் சந்திப்பு நடத்தப்பட வேண்டுமானால் கட்சியின் வழியே அவ்வாறு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் அம்னோ பேராளர்கள் மாநாட்டில் முன்னாள் துணைப் பிரதமருமான அவர் பேசினார்.
கடந்த மாதம் 22 அம்னோ எம்பிக்கள் புத்ரா ஜெயாவில் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் சந்திப்பு நடத்தியது குறித்து அவர் பேசினார்.
அம்னோவில் உள்ள அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக முன்னாள் உள்துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
கொல்லைப்புற வழியில் பக்காத்தான் அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தும் முயற்சிகள் நிச்சயம் நிராகரிக்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
அம்னோவில் உள்ள அனைத்து எம்பிக்களும் தேசிய முன்னணி மற்றும் அம்னோவில் தொடர்ந்து நீடிக்க தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஸாஹிட் தெரிவித்தார்
பின் வழியில் நடத்தப்படும் அனைத்து சந்திப்புக்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here