அமைச்சர்களுக்கு ரிம. 5700 பார்க்கிங் அலவன்சா?உண்மையில்லை

0

அமைச்சர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கார் நிறுத்துமிட அலவன்சாக 5,700 ரிங்கிட் வழங்கப்படுவதாக வெளியிடப்பட்ட செய்தியில் உண்மையில்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
எஃப்பி சஹாருடின் என்ற நபர் தமது டுவிட்டர் செய்தியில், அமைச்சர்களின் சம்பளத்தோடு கார் நிறுத்துமிட கட்டணமாக மாதந்தோறும் 5,700 ரிங்கிட்டைப் பெறுவதற்கான விளக்கம் வேண்டுமென குறிப்பிட்டதை அடுத்து, சைபுடின் மேற்கண்ட மறுப்பைத் தமது டுவிட்டரில் பதிலளித்தார்.
அதன் பின்னர், உண்மையான விவரத்தைத் தெரிந்து கொள்ளாமல், அதனைக் குறிப்பிட்டது தவறு எனக் கூறி, அந்தச் செய்தியை தாம் அழித்து விட்டதாக சஹாருடின் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 5 =