அமைச்சரவையில் இடம் பெற பாஸ் நெருக்குதல் தராது

0

அமைச்சரவையில் பாஸ் கட்சிக்கு இடம் தர வேண்டுமென நெருக்குதல் தரப்படாது என அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார். நேற்று வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் முஹிடின் யாசினுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். முஹிடினுடனான சந்திப்பின் போது தமது கட்சியின் சார்பில் பரிந்துரையைத் தந்ததாகவும், அமைச்சரவையில் நேர்மையான, தகுதியான, திறமையான, சமூகங் களைப் பிரதிநிதிக்கும் தலைவர் களை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகத் தெரிவித் தார்.

மேலும், அமைச்சரவையில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், மக்கள் நலம் போன்றவற்றில் வெளியிலிருந்து நிபுணர்களை நியமிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். முஹிடினுக்கு ஆதரவு தர 3 மலாய் சார்பு கட்சிகளில் பாஸ் கட்சிக்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரிபூமி பெர்சத்துவுக்கு 30 உறுப்பினர்களும் அம்னோவுக்கு 39 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =