அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி

0

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த லான்டோரேவை எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (7-3), 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவரும், 3-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் 2-வது சுற்றில் 3-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போஸ்னியாவை சேர்ந்த ஜூமுகரை வீழ்த்தினார். முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகலிடம் முதல் செட்டை இழந்தது போலவே 2-வது சுற்றில் முதல் செட்டை பெடரர் இழந்து இருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் நிஷிகோரி (ஜப்பான்) வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் 8-வது வரிசையில் இருப்பவரும், 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது ரவுண்டில் சக நாட்டைச் சேர்ந்த கேத்ரின் மெக்னலியை எதிர் கொண்டார்.

இதில் செரீனா முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் தோற்றார். ஆனால் அதற்கு அடுத்த 2 செட்களில் சுதாரித்து ஆடி 6-3, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3-வது வரிசையில் இருக்கும் பிறிஸ் கோவா (செக்குடியரசு) 6-1, 6-4 என்ற கணக்கில் மரியம் போல் வாடேயை (ஜார்ஜியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாம் நிலை வீராங்கனையான ஆஸ்லே பேர்டி (செக்குடியரசு) 6-2,7-6 (7-2) என்ற கணக்கில் லாரன்டேவிசை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் 5-வது வரிசையில் இருக்கும் சுவிட்டோலினை (உக்ரைன்), 10-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றில் தோற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =