அமெரிக்க அதிபர் தேர்தல் – முதல் கட்டமாக ஜோ பிடன் முன்னிலை

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 91 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 67 இடங்கள் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் மசாசூட்ஸ், நியூ ஜெர்சி, மேரிலாண்ட் மற்றும் வெர்மாண்ட் ஆகிய மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், ஓக்லஹாமா, கெண்டகி மற்றும் இண்டியானா ஆகிய மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + fifteen =