அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளுக்கு தடை

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

இந்த டிக் டாக் செயலி மூலம் சீனா உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என அந்நிறுவனம் தொடர்ந்து  கூறிவருகிறது.
இந்நிலையில், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமுடைய வீடியோக்களை பகிரும் செயலியான டிக்டாக் மற்றும் செய்திகளுக்கான செயலியான வீ சாட் ஆகியவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்வதற்கு வரும் 20-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.
இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடி காரணமாக, டிக் டாக்கின் அமெரிக்க செயல்பாட்டு பிரிவை ஆரக்கிள் நிறுவனத்திடம் அந்நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் அதிர்ச்சிகரமான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீன செயலிகள் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − five =