அமித்ஷாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், “உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − five =