அபு தாபி பணிசரக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமி சந்திரன் நான்கு தங்கங்களை வென்றார்

0

ஐக்கிய நாட்டு சிற்றசின் அபு தாபியில் நடைபெற்ற 5ஆவது அனைத்துலக பணிச்சரக்கு போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ அபிராமி நான்கு தங்கங்களை வென்றார்.
மொத்தம் 15 நாடுகளில் இருந்து 286 போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 262 பிரிவுகளாக விளையாடப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 10 கிளப் பங்கு பெற்றன. இப்போட்டியில் மலேசியாவுடன் இந்தியாவும் பங்கு பெற்றது.
முதல் நாள் 6.2.2020 ஆட்டமான 9 வயதிற்கு குறைந்தவர்கள் சுற்றுப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ அபிராமி ரஷ்யாவைச் சேர்ந்த மல்லிகா நெஷாவை தோற்கடித்து தங்கம் வென்றார்.


அதே நாளில் இரண்டாவது அங்கத்தில் இந்தோனேசியாவின் சாரா பின் காராமையை தோற்கடித்து ஸ்ரீ அபிராமி தங்கம் வென்றார்.
இரண்டாவது நாளான 7.2.2020இல் பத்து வயதிற்கு குறைந்தவர்கள் சுற்றுப் போட்டியில் ஸ்ரீ அபிராமி தங்கம் வென்றார். இப்பிரிவில் மொத்தம் ஐந்து பேர் பங்கு பெற்றனர். அதே நாளில் 9 வயதிற்கு குறைந்தவர்கள் சுற்றுப் போட்டியில் ஸ்ரீ அபிராமி மீண்டும் ஒரு தங்கத்தை வென்றார்.
இறுதியாக 8.2.2020இல் நடைபெற்ற 11 வயதிற்கு குறைந்தவர்கள் சுற்றுப் போட்டியில் நால்வருடன் இணைந்து விளையாடினாலும் ஸ்ரீ அபிராமி குழுவினர் வெண்கலம் வென்றனர்.
இப்போட்டியில் ஐக்கிய அரபு சிற்றரசு, குவைத், அமெரிக்கா, கனடா, சீனா, தாய்லாந்து, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், பின்லாந்து, ஜெர்மனி, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் மலேசியாவும் பங்கு பெற்றது.
ஸ்ரீ அபிராமி 2026இல் ஜெர்மனியில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற ரஷ்யாவிற்குச் சென்று பயிற்சி பெற தேர்வு பெற்று உள்ளார். இப்பயிற்சிக்கு மொத்தம் 25 லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது. இதற்கு அவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுவிடம் முறையிட்டு தோல்வி அடைந்தார்.

ஓம்ஸ் பா. தியாகராஜனின் நிதி உதவி

அதனைத் தொடர்ந்து செனட்டர் தேவமூர்த்தி தலைமையிலான மித்ராவிடம் முறையிட்டு மனு சமர்ப்பித்தார். அவர்கள் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படமாட்டாது என நிராகரித்துள்ளனர். இந் நிலையில் கிள்ளான் இந்து இளைஞர் இயக்க சார்பாக செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாக ராஜனிடம் முறை யிட்டனர்.
அவர் அக்குழந்தையின் சாதனைகளைக் கருத்தில் கொண்டும் அக்குழந்தையின் மூலம் இந்நாட்டு இந்தியர்களுக்கு பெருமை கிட்டும் என்பதினாலும் ரஷ்யாவிற்கு பயிற்சி பெற ஸ்ரீ அபிராமிக்கு உடனடியாக நிதி உதவி வழங்கினார்.
அவர் மொத்தம் 8 லட்சம் வெள்ளி அக்குழந்தையின் பயிற்சிக்காக நிதி உதவி வழங்கியுள்ளார். அதன் முதல் கட்ட தேர்வு பயிற்சிக்குப் பின் இப்போது முழு பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here