அபராதம் உயர்த்தப்படுவதற்கு இரண்டு சட்டங்களில் திருத்தம் வேண்டும்; தற்காப்பு அமைச்சர் விளக்கம்

1988ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கும் பரிந்துரை தொடரப்பட்டால் அரசாங்கம் இரண்டு சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
விளக்கமளிப்புச் சட்டம் (388 சட்டம்) மற்றும் 1988ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாடு சட்டம் (342 சட்டம்) ஆகியவற்றில் திருத்தம் செய்யும் அவ்விரு சட்டங்களாகும் என்று அவர் விளக்கினார்.
388 சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதம் ஆயிரம் வெள்ளியாக உள்ளது. இதுவே 342 சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதமாகும். மேலும், இந்த அபராதத் தொகை அதிகரிக்கப் படுமானால் அது 388 சட்டத்துடன் வித்தியாசமாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இவ்விரு சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதோடு, தகுந்த விவரங்களுடன் அவ்விரு சட்டத்திருத்தங்களையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். ஜோகூர், உலு திராமில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ராணுவ படை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
அபராதம் உயர்த்தப்படுவது குறித்து, அமைச்சரவையில் கடந்த வாரம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
342 சட்டத்தை மீறும் தரப்பினருக்கு விதிக்கப் படும் 1,000 வெள்ளி அபராதம் அதிகரிக்கப்பட வேண்டும்
என்ற சுகாதார அமைச்சின் பரிந்துரையை பிரதமர் டான்ஸ்ரீ
முகிடின் யாசின் வரவேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 2 =