அன்வார் பிரதமராகும் வாய்ப்பு பாதிக்காது

பிகேஆர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகும் வாய்ப்பை ஒருபோதும் பாதிக்காது என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
பக்காத்தான் ஹராப் பானின் இணக்கத்தின் அடிப் படையில், நாட்டின் தலைமைத்துவப் பொறுப்பை பிரதமர் துன் மகாதீர், அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.

பக்காத்தான் ஹராப்பானின் இணக்கத்தின் அடிப்படையில், நாட்டின் தலைமைத்துவப் பொறுப்பை பிரதமர் துன் மகாதீர், அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர். இந்த விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் பங்காளிக் கட்சிகளின் இணக்கத்தில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை.
அன்வாருக்கு பக்காத்தான் ஹராப்பானில் இருந்துதான் ஆதரவு கிடைத்து வருவதாக உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சருமான அவர் சொன்னார். நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான்தான் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், அன்வாரின் நிலையை பக்காத்தான் ஹராப்பான்தான் முடிவு செய்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் பிகேஆரில் நிலவிவரும் உட்பூசல், அன்வாரின் நிலைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் தெளிவுபடுத்தினார். இதனிடையே பிகேஆர் உதவித் தலைவர் ஸுரைடா கமாருடின், கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் சுமார் 10,000 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறக்கூடும் என்ற தகவலை சைபுடின் மறுத்தார். இது ஒரு வதந்திதான். ஆகையால் இந்தத் தகவலில் உண்மை எதுவும் இல்லை என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + five =