அன்வார் தலைமைத்துவத்திற்கே எங்களின் ஆதரவு

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்திற்கு தொடர்ந்து பிளவுபடாத ஆதரவை வழங்குவதாக சிலாங்கூர் மாநில பிகேஆர் மகளிர் தொகுதி தலைவிகள் கூட்டறிக்கை ஒன்றில் கூறினர்.
நேற்று முன்தினம் சிலாங்கூர் முன்னாள் பிகேஆர் மகளிர் அணி தலைவி டரோயா அல்வி கட்சியிலிருந்து வெளியேறி யதைத் தொடர்ந்து சுங்கை பெசார், உலுசிலாங்கூர், தஞ்சோங் காராங், கோல சிலாங் கூர், செலாயாங், பண்டான், உலு லங்காட், பாங்கி, பூச்சோங், பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா, சுங்கை பூலோ, காப்பார், கிள்ளான், கோத்தா ராஜா, கோல லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய தொகுதிகளின் தலைவி கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
டரோயா 48 பேருடன் கட்சியி லிருந்து வெளியேறியுள்ள போதி லும், சிலாங்கூர் பிகேஆர் தொடர்ந்து வலிமையுடன் இருக் கும் என இவர்கள் குறிப்பிட்டனர்.
நேற்று முன்தினம் டரோயா வுடன் காப்பார் டிவிஷனைச் சேர்ந்த மகளிர் அணியினர் பெரும்பாலோர் வெளியேறிய போதிலும் அந்த தொகுதியின் மகளிர் அணி தலைவி லட்சுமி முனுசாமி வெளியேறவில்லை.
அதே வேளையில் முன்னாள் பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவாக இருந்து வந்த சிலாங்கூர் பிகேஆர் மகளிர் அணி துணைத் தலைவி சங்கீதா ஜெயக்குமார் மற்றும் புக்கிட் மெலவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சூல்கிப்ளி கட்சிக்கு தங்களின் விசுவாசத்தை வெளிப் படுத்தியுள்ளனர்.
இதனிடையே டரோயா காப்பார் தொகுதியிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், காப்பார் தொகுதி வலிமையாக இருப்பதாக அத்தொகுதியின் தலைவர் டத்தோ அப்துல்லா சானி கூறினார்.
காப்பார் தொகுதியில் 20,000 உறுப்பினர்கள் உள்ளனர். 48 பேருடன் டரோயா வெளியேறியது பெரிய விசயமல்ல என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =