அன்வார்தான் அடுத்த பிரதமராக வேண்டும்: பிரசாரத்தை பிகேஆர் இளைஞர் அணி தொடங்குகிறது

0

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம்தான் நாட்டின் எட்டாவது பிரதமராக வேண்டும் என்ற பிரசாரத்தை அக்கட்சியின் இளைஞர் அணி முடுக்கிவிட்டுள்ளது.

பிகேஆர் உறுப்பினர்கள், ஹராப்பான் ஆதரவாளர் கள், மலேசியர்கள் அனைவரும் முகநூல் சமூக ஊடகத்தில் ‘ஹேஸ்டெக் தெகோ செத்தியா அன்வார் இப்ராஹிம்‘ என்ற வாசகத்தைப் பயன்படுத்துமாறு அதன் தலைவர் அக்மால் நாசிர் கூறினார். இப்பிரசாரத்தின் உச்சகட்ட நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 29ம் தேதி
போர்ட்டிக்சன் பந்தாய் பத்து சத்துவில் நடைபெறும்.

சமீபத்தில் பிகேஆர் மற்றும் பக்காத்தானை விட்டு விலகியவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்றும் அவர் சாடினார். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் சுய மரியாதையுடைய எந்த மலேசியரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

நவம்பர் மாதம் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (ஏபெக்) முடிந்த பிறகு அன்வார் பிரதமர் ஆவார் என்ற தீர்மானத்தை பக்காத்தான் தலைவர்கள் மாநாடு எடுத்ததில் அதிருப்தியடைந்த பலர் கட்சியில் இருந்தும் பக்காத்தானில் இருந்தும் விலகினர். தற்போதைய அரசியல் நெருக் கடியை மிகவும் விவேக மாகக் கையாண்ட மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவையும் அக்மால் பாராட்டினார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பக்காத்தான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு ஒரு சந்திப்பு நடத்திய பின்னரும், பக்காத்தான் தன் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்த பின்னரும், மகாதீர் தம் பிரதமர் பதவியைத் துறந்தார். அதே நேரத்தில் பெர்சத்துவின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவருடைய பதவி விலகலை ஏற்றுக் கொண்ட மாமன்னர், அடுத்த பிரதமர் நியமிக்கப்படும வரை, மகாதீரை இடைக்காலப் பிரதமராக நியமித்தார்.

பெர்சத்து பக்காத்தானில் இருந்து விலகுவதாக முஹிடின் அறிவித்ததால் பக்காத்தான் நாடாளுமன்றத்தில் தன் பெரும்பான்மை இழந்தது. 222 நாடாளுமன்றத்தில் 112 தொகுதியைக் கொண்டிருக்க வேண்டிய பக்காத்தான் தற்போது 92 தொகுதியை மட்டுமே கொண்டிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகேஆர் கட்சியின் அரசியல் எதிரிகளான அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளோடு சந்திப்பு நடத்தியதால் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியும், உதவித் தலைவர் ஸுரைடா கமாருடினும் உறுப்பிய நீக்கம் செய்யப்பட்டதாக கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாமும் இதர 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் இருந்து தானாக விலகிக் கொள்வதாக அஸ்மின் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 6 =