கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் இந்தியர் நல சிறப்பு அதிகாரி பிகேஆர் சுரேஷ் இல்லத்திற்கு தீபாவளியன்று வருகைப் புரிந்தார். உணவருந்திய பின்னர் அன்வாரின் கைகளைப் பற்றிக் கொண்ட பிகேஆர் சுரேஷின் மாமனார் இராகவன் ரெங்கநாதன் (வயது 96) நான் உங்களைவிட மட்டுமின்றி பிரதமர் துன் மகாதீரைவிடவும் வயது மூத்தவர். இருந்தாலும் என்னுடைய இறுதிகாலத்திற்குள் அதாவது நான் கண்ணை மூடுவதற்குள் உங்களை பிரதமர் கோலத்தில் பார்த்து மகிழ வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனாரின் தீவிர பற்றாளரான இவர், உலுபெர்ணம் மஇகா கிளைத் தலைவராகவும் தஞ்சோங் மாலிம் நகராண்மைக் கழக உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.