26 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பட்ஜெட் வாக்கெடுப்பின் போது அமைச்சரவையில் இல்லாத அம்னோ பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அம்னோவிற்குள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்னோ பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் அரசாங்கத்திற்கு எதிராக எடுத்துள்ள இந்த முடிவிற்கு பின்னணியில் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நாட்டின் 9 ஆவது பிரதமராக முடிசூட்ட அம்னோவின் முக்கிய தலைவர்கள் எடுத்துள்ள முடிவே காரணம் என்று வெளிநாட்டில் செயல்படும் பிரபல ஊடகவியலாளரும், அம்னோவிற்கு ஆதரவாக செயல்படுபவருமான ராஜா பெட்ரா கமாருடின் கருத்துரைத்துள்ளார்.
அம்னோ தரப்பிலிருந்து அவரது கருத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.