அன்வாரைத்தான் நாங்கள் இன்னும் ஆதரிக்கிறோம்

0

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக ஜசெக மற்றும் அமானா தங்களின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தி உள்ளன.இருப்பினும் துன் மகாதீர் பிரதமர் பதவியை ஏற்ற 6 மாதங்களுக்குப் பிறகு, பிகேஆர் தலைவர் அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா தலைவர் முகமட் சாபு கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் மத்திய அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்ற இது ஒரு சாதுரியமான திட்டம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
“கடந்த 1998 முதல் அன்வார் பிரதமராக நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறோம். இனியும் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என கூட்டறிக்கையில் அவர்கள் வலியுறுத்தினர்.
பக்காத்தான் ஹராப்பான், வாரிசான், மகாதீரின் பெர்சத்து ஆகியவை ஒன்றிணைந்தால் தான் புத்ராஜெயாவை நம்மால் கைப்பற்ற முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அரசியல் பயணம் 22 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆகையால் அன்வார் நாட்டின் 10ஆவது பிரதமராக இன்னும் 6 மாதங்களுக்கு எங்களால் காத்திருக்க முடியும் என அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த 6 மாத அதிகாரமாற்ற ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக அனைத்துத் தலைவர்களும் கையெழுத்திட்டு பொது அறிவிப்பு செய்யப்படும்.
கடந்த 2018 பொதுத் தேர்தலில் மக்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு கொடுத்த நம்பிக்கை மீட்டெடுக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 11 =