அன்வாரே பிரதமர்; சபா, சரவாக் பிகேஆர் பரிந்துரை

0

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராக வர வேண்டுமென்று சபா, சரவாக் மாநிலங்களின் பிகேஆர் கிளைகள் ஏகமனதாக அறிவித்திருப்பதாக அதன் உதவித் தலைவர் மைக்கல் தியோ தெரிவித்தார். மே 7ஆம் தேதி பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு ஏற்ப தங்களின் அறிவிப்பு அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். அதே கூட்டத்தில் அன்வார் பக்காத்தான் கூட்டணியின் தலைவராகவும் எதிர்க்கட்சிகளின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
திடீர் தேர்தல் வந்தால், கூட்டணியை அன்வாரே வழி நடத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலை துன் மகாதீர் பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைத்த பின்னர், சபா பிகேஆர் தலைவர் கிறிஸ்டினா லியூ இவ்விவகாரத்தில் தர்ம சங்கடத்தில் ஆட்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஷாபி அப்டாலை பிரதமராக வருவதற்கு தாம் விரும்பினாலும், அதனை பிகேஆர் தலைமைத்துவ மன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுவதாகத் தெரிவித்தார். இரு நாள்களுக்கு முன்னர், பிகேஆர் நீங்கலாக, சபாவின் ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் ஒன்று கூடி, ஷாபி அப்டால் நாட்டின் பிரதமராவதற்கான ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − seven =