அன்வாருடன் சந்திப்பு நடத்தியது உண்மையே

0

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் தாம் அண்மையில் சந்திப்பு நடத்தியதை உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் ஒப்புக் கொண்டார்.
போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருடன் தாம் நடத்திய சந்திப்பு தனிப்பட்ட ஒன்று என பெர்சத்து பொதுச் செயலாளருமான அவர் கூறினார்.
“நாங்கள் நண்பர்கள், பல ஆண்டுகளாகச் சந்திக்காததால் மீண்டும் சந்தித்தோம்” என்றார் அவர்.“நாங்கள் இருவரும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது குறித்து வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் எதுவுமில்லை” என அவர் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியில் உள்ள சில தலைவர்களுடன் அன்வார் சந்திப்பு நடத்தியதாக பிகேஆர் தலைமை கொறடாவான ஜொஹாரி அப்துல் கடந்த ஜுன் 10ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.
துன் மகாதீர் மீண்டும் பிரதமராவதை பிகேஆர் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுங்கட்சித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு குறித்து பிகேஆர் தலைமைத்துவத்திடம் அன்வார் தெரிவித்து விட்டதாக அவர் மேலும் கூறியிருந்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், ஹம்ஸா ஸைனுடின் மற்றும் சரவாக் அரசாங்கத் தலைவர்களுடன் அன்வார் சந்திப்பு நடத்தியதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 11 =