அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா? – உண்மையில்லை

0

இவ்வார இறுதியில் நடைபெறும் பிகேஆர் பேராளர்கள் மாநாட்டில் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற வதந்தியை பிகேஆர் தொடர்புக் குழு இயக்குனர் பாமி பாட்ஸில் நிராகரித்தார்.
மேலும் பிகேஆர் பேராளர்கள் மாநாட்டிற்கான தீர்மானங்களை சமர்ப்பிக்கும் தேதி காலாவதியாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.
“தீர்மானங்களைக் கையாளும் குழுவில் நான் இருக்கிறேன். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான எந்தவொரு தீர்மானமும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை” என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இதனிடையே கட்சியின் இளைஞர் பிரிவின் டிவிஷன் அளவிலான ஆண்டுக் கூட்டங்களில் இப்படி ஒரு தீர்மானம் எதுவும் கொண்டு வரப்படவில்லை என ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் தெரிவித்தார்.
அன்வாருக்கு ஆதரவைத் தெரிவிக்கும் பல தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவே கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரம் பகிரப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 4 =