அன்வாரின் முன்னாள் உதவியாளர் வழக்கைத் தொடர்வதில் உறுதி!

அண்மையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடினை சந்தித்திருந்தாலும், தாம் அவர் மீது தொடர்ந்த வழக்கில் பாதிப்பு இல்லையென முகமட் யூசோப் ராவுத்தர் தெரிவித்தார்.
கடந்தாண்டு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அன்வாரின் வீட்டில் தம்மை அவர் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகவும் அவரின் அரசியல் செயலாளர் ஃபர்ஹாஸ் வாஃபா சல்வடோர் ரிஸால் முபாரக் தம்மை உடல் ரீதியாகத் தாக்கி கடுமையான காயத்துக்கு ஆளாக்கியதாகவும் பிகேஆரின் முன்னாள் ஆய்வு அதிகாரியான முகமட் யூசோப் ராவுத்தர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அது சம்பந்தமாகவே அன்வாரும் ஃபர்ஹாஸும், ஹம்சா ஸைனுடினை சந்தித்திருப்பதாகத் தமக்குத் தகவல் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்விரண்டு புகார்களின் விசாரணை அறிக்கைகளைப் போலீசார் சட்டத் துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அது பற்றி பல முறை தாம் நினைவுறுத்தியுள்ள தாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தாம் தாக்கப்பட்டதை அடுத்து, பந்தாய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது தமக்கு 40,000 ரிங்கிட் செலவானதாகக் குறிப்பிட்ட அவர், அது சம்பந்தமாகத் தாம் ஃபர்ஹாஸ் மீது தொடுத்துள்ள வழக்கு இவ்வாண்டு அக்டோபரில் விசாரணைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாம் மனதளவிலும் உடலளவிலும் தாக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளானதால், தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று யூசோப் ராவுத்தர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =