அன்வாரின் அறிவிப்பை ஆய்வு செய்வோம்

தமது புதிய கட்சி பற்றிக் குறிப்பிட்டுள்ள அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பு ஆய்வு செய்யப்படும் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
அன்வார் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை என்றும் தமது புதிய கட்சி சங்க பதிவு இலாகாவின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர், மேற்கொண்டும் என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கப்படும் என்று மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அன்வார், மகாதீரின் புதிய கட்சி பக்காத்தான் ஹராப்பானில் சேர விண்ணப்பம் எதனையும் செய்யவில்லை என்றும் அப்படி செய்தால், கூட்டணி அதனைப் பரிசீலிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தலைநகர் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற காஷ்மீர் ஆக்கிரமிப்பு சம்பந்தமான எதிர்ப்புப் போராட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மகாதீர், செய்தியாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =