அன்று கஸ்தூரி,இன்று காமாட்சியை கேவலப்படுத்துகிறார்கள்! இதற்கு முடிவு கட்டுவோம்

0

சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு உட்பட பல இந்தியப் பெண்களைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் தரப்பினரின் போக்கிற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் வலியுறுத்தினார். அண்மையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவைப் பார்த்து இருட்டு என்று கூறினார்கள். இப்போது சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, யாரை வைத்திருக்கிறார் என்று மிக மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்களைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து கொண்டிருக்கும் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது சரியானது என்று பிரபாகரன் தெரிவித்தார். நாம் அனைவரும் அக்கா, தங்கைகளுடன் பிறந்தவர்கள். ஆகவே பெண் குலத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களும் தங்களது உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியப் பெண்களைப் பற்றி மிக மோசமாகப் பேசியிருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் காமாட்சிக்கு முழு ஆதரவு வழங்குவதாக பிரபாகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =