அன்னாசி பழங்களின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன

நாட்டில் அன்னாசி பழங்களின் தேவைகள் அதிகரித்துள்ளதால் சிலாங்கூரில் உள்ள எம்.டி 2 உயர் மதிப்பு அன்னாசி நடும் திட்டம் இதுவரை 404 ஹெக்டேர் (1,000 ஏக்கர்) நிலத்தை எட்டியுள்ளதாக வேளாண் துறை நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புகளையும்
பெற்றால் பயிர்கள் மற்றும் அன்னாசி உற்பத்தி விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் துறை அமைச்சர் இர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
“எம்.டி 2 அன்னாசி பழங்கள் இலாபகரமான வருமானத்தை ஈட்ட முடியும். ஏனெனில் உள்ளூரில் அதன் உற்பத்தி குறைவாக இருக்கிறது.
மேலும், வெளிநாடுகளில் அதன் தேவைகள் அதிகமாக உள்ளதால் தற்போது அன்னாசி பழங்களின் ஏற்றுமதி அதிகரித்த வண்ணம் உள்ளது.
“அன்னாசி பழங்களின் தேவைகள் அதிகரித்துள்ளதால் கோலா லங்காட், கோலா சிலாங்கூர், சபாக் பெர்ணாம் மற்றும் கிள்ளான் உள்ளிட்ட சிலாங்கூர் முழுவதும் அன்னாசி அதிகமான எண்ணிக்கையில் பயிரிடப்பட்டுள்ளது”என்றார் அவர்.
தோட்டம் அல்லது பண்ணையிலிருந்து அன்னாசி பழங்களை நேரடியாக வாங்கும் வாடிக்கையாளர்கள் பழத்தின் அளவைப் பொறுத்து ஒரு கிலோவுக்கு ரிம2 முதல் ரிம5 வரை வாங்கும் வாய்ப்பைப் பெறலாம்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் சிலாங்கூர் உற்பத்தித் திறனில் வளர்ச்சி அடையவும் சிலாங்கூர் சரியான பாதையில் செல்வதாக இஷாம் கூறினார்.
“அன்னாசிப்பழங்களைத் தவிர, ஜே 33 தேன் பலாப்பழம், இஞ்சி, ரோஸல், காளான்கள், சோளம், எலுமிச்சை
பழங்கள், தேங்காய், மாட்டிறைச்சி, வாழைப்பழங்கள் போன்ற அதிக மதிப்புள்ள காய்கறிகளை நாங்கள் ஏற்கெனவே
பயிரிடத் தொடங்கியுள்ளோம்“ என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 2 =