அன்னாக் புக்கிட் ஆகாச அம்மன் ஆலய நிலம் யார் பெயரில் உள்ளது?


அலோர்ஸ்டார் அன்னக் புக்கிட் வட்டாரத்தில் மிகவும் பிரசிபெற்ற ஆலயமாக விளங்குகிறது ஆகாச அம்மன் ஆலயம்.
இந்த ஆலயம் அலோர்ஸ்டார் ஜித்ரா செல்லும் பழைய சாலையின் காவல் நிலையத்தின் அருகாமையில் இருந்து வருகிறது. அரசாங்க மேம்பாட்டுத் தேவைகளுக்கு ,மாநில அரசாங்கம் புதிய இடம் தருவதாக ஆய்வு செய்து தாமான் அமானில் புதிய மாற்று நிலத்தை அடையாளம் கண்டனர்.
அந்த இடத்துக்கு பதிலாக ஆலய நிர்வாகம் அன்னாக் புக்கிட் இரயில்வே சீன பள்ளியின் பக்கத்தில் உள்ள நிலத்தை கோரி, மாநில அரசின் ஒப்புதலில் நிலமும் ஒதுக்கி பல லட்சம் வெள்ளி மானியம் வழங்கியது.
ஆலய நிர்வாகம் அதன் கட்டுமான பணிகளை செய்யத் துவங்கி பலரிடம் வசூல் வேட்டையும் நடத்தி வந்துள்ளது.பொது மக்களும் உதவி செய்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு இன்று விட்ட குறை தொட்ட குறை என இழுபறியாக இருந்து வருவதாக அதன் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான மாஸ்டர் ராமசாமி கூறினார்.
இன்றைய நடப்பு ஆலய நிர்வாகம் எம்மாதிரியான நிலையில் ஆலய நிர்வாகத்தை நடத்துகிறது என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறது என்று வட்டார பொது மக்கள் கூறினர்.
தேசிய முன்னணி அரசாங்கம் தொட்டு கடந்த பக்காத்தான் அரசாங்கம் வரை இந்த ஆலயம் முழுமை பெற துணையாக இருந்துள்ளனர். ஆலய கட்டுமானப் பணிகளின் தாமதத்தால்,வட்டார மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 12 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஏன் ஆலயம் கட்டப்பட வில்லை.
இதனிடையே இந்த ஆலயம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்து வருகிறது.
ஆலய நிலம் ஆலயத்தின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை, சங்கங்களின் பதிவும் ரத்தாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை மாஸ்டர் ராமசாமி உறுதிப்படுத்தினார். இந்த ஆலயத்தின் நிலம் நான்கு மலாய்க்காரர்களின் பெயரில் இருப்பதை சங்கங்களின் பதிவில் நிரூபணமாகியுள்ளது என்றார் மாஸ்டர் ராமசாமி.
கெடா அரசு யயாசான் வழி என்னை அழைத்து, ஆலயத்தின் இன்றைய செயல் நிலவரங்களை கண்டறிந்தனர். இதில் நிறைய முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்று விளக்கம் தந்தார் மாஸ்டர் ராமசாமி.
இந்த ஆலய பிரச்சினையினை சுமுகமாக தீர்க்க வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுடன் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது,அந்த கூட்டம் செல்லாது என்று நடப்பு ஆலய நிர்வாகம் போலீசில் புகார் செய்துள்ளது. கூட்டத்தை நடத்தாதீர்கள் என்று காவல் துறையினர் ஆலோசனை கொடுத்தனர்.
ஆலயத்தில் முறை கேடுகள் நிகழ்ந்து வருவதால், புதிய நிர்வாகம் அமைக்க சங்கங்களின் பதிவிலாகா அனுமதி தந்துள்ளதாக மாஸ்டர் ராமசாமி தனது காணொளி அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளார். எனவே விரைவில் மக்களுடனான பொது சந்திப்பு ஆலய வளாகத்தில் காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறும் என்றார் ராமசாமி.
கெடா மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் செகு அஸ்மானின் பார்வைக்கு ஆலயம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளேன்.
இந்த பிரச்சினையினை தீர்க்க நடப்பு நிர்வாகம் இணக்கம் காண வேண்டும் என்று தனது பத்திரிகை அறிக்கையில் கூறினார் மாஸ்டர் ராமசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − two =