அனைத்தையும் உங்களுக்காகவே செய்தேன்

பெல்டா குடியேற்றக்காரர் களுக்கு எல்லாவித உதவியையும் செய்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, சிலிம் இடைத்தேர்தலை ஒட்டி பெல்டா குனோங் பெசுட் 1 எனும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு உரையாற்றிய நஜிப், தமது 9 ஆண்டு கால ஆட்சியில் யாரும் செய்ய முடியாத உதவிகளைச் செய்ததாகவும், பெல்டா பங்குச் சந்தையில் நுழைந்தபோது ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் 15,000 ரிங்கிட்டை வழங்கியது, ரொக்க நிதியுதவி, நோன்புப் பெருநாள் போனஸ் போன்றவற்றை தாம் வழங்கியதாகவும் அதைப் போன்ற உதவிகளை வேறு யாரும், பக்காத்தான் உட்பட வேறு யாரும் செய்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் அதிகமான உதவிகளைச் செய்ய நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பெல்டா திட்டத்தை உருவாக்கியதே அம்னோவாக இருக்கும்போது, மக்களின் பணத்தைக் கொள்ளையடித்ததாக தம்மீது குற்றம் சுமத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்ஆர்சி பணத்தின் 99 விழுக் காட்டை மக்களின் நலனுக்காகவே செலவழித்ததாகவும் தவ்ஃபிக் பள்ளிகளுக்கும் ஆதரவற் றோர் இல்லத்துக்கும் நிதியை வழங்கியதாகவும் ஆனால், அதற்காகத் தமக்கு 3 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அந்தப் பணத்தைத் தமது சொந்த செலவுக்காக ஒரு போதும் செலவிட்டது இல்லையென்றும், தாம் யாரிடமும் பணம் கேட்டதில்லை என்றும் நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவே மலேசிய மக்கள் உதவித் தொகையை வழங்கியதாகவும் அதனைக் கருத்தில் கொண்டு அம்னோ வேட் பாளர் முகமட் ஸைடி அஸிஸுக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =