அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஹசிம் அம்லா ஓய்வு

0

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஹசிம் அம்லா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான சாதனைகளை படைத்திருந்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.

இந்நிலையில் 36 வயதாகும் அவர் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அம்லா 124 டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்களுடன் 9282 ரன்களும், 181 ஒருநாள் போட்டியில் 27 சதங்களுடன் 8113 ரன்களும், 44 டி20 போட்டிகளில் 1277 ரன்களும் அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − nine =